வெயிட் ஈஸ் ஓவர்.. போடு விசில.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்த மாஸ் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் இன்று துவங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ள வீடியோ தற்போது அந்த அணி ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.
Image Credit : CSK | Twitter
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி (இன்று) துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.
Image Credit : CSK | Twitter
கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் தொடரிலேயே வெளியேறி இருந்தது. ஆகவே, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெய்ல் ஜெமிசன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் சிசாண்டா மஹாலாவை CSK அணி தேர்வு செய்துள்ளது. அதே நேரத்தில் CSK-வின் முகேஷ் சவுத்ரியும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சிங் CSK அணியில் இணைந்திருக்கிறார்.
Image Credit : CSK | Twitter
குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடப்பு சேம்பியனான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இதற்காக சென்னை அணி வீரர்கள் சில தினங்களுக்கு முன்னர் அகமதாபாத் சென்றனர். நேற்று தீவிர பயிற்சியிலும் வீரர்கள் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலை தல பக்கங்களில் அந்த அணியின் பிரத்யேக பாடலான விசில் போடு-வை வெளியிட்டிருக்கிறது. தோனி துவங்கி அந்த அணியின் அனைத்து வீரர்களும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
It's that time of the year when the Super Kings come together as a pride in #Yellove to roar! What are you waiting for?
Get. Set. #WhistlePodu with our official anthem! 🦁💛 pic.twitter.com/5KaBBtD0Zb
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2023