சூப்பர் ஸ்டார் BGM.. பென் ஸ்டோக்ஸ் & மொயீன் அலியின் அதகளமான என்ட்ரி.. வைரலாகும் வீடியோ..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் துவங்க இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி சென்னை வந்திருக்கின்றனர். இது தொடர்பாக சிஎஸ்கே அணி பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள்.. முழு லிஸ்ட் இதோ...!
ஐபிஎல் 2023
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
பயிற்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி முடிவடைந்துள்ளதால் ஜடேஜா CSK அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, இங்கிலாந்து அணியின் மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் சென்னைக்கு வந்திருக்கின்றனர். ஆல் ரவுண்டர்களான ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோரின் பங்களிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதலாக பலமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
வீடியோ
இந்த சூழ்நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி என்ட்ரி வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் BGM-ல் இருவரும் ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
The superstars descent from the morning! 🕴🕴#WhistlePodu #Yellove 🦁💛@benstokes38 pic.twitter.com/Ct7DLovG4z
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2023
Also Read | பாச மகனுடைய கல்லறையில் QR Code பதித்த பெற்றோர்.. கலங்கடிக்கும் காரணம்..!

மற்ற செய்திகள்
