"தல அப்பவே தாறுமாறு தான் போலயே".. தோனியை முதல் முறை பார்க்கும் போது நடந்த சம்பவம்.. ரெய்னா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது உலகளவில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் பார்வையும் ஐபிஎல் தொடர் மீது தான் உள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன், வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "இது எப்படி இங்க, 400 வருஷம் பழமை ஆனதாம்".. வீட்டு சமையல் அறையை புதுப்பிச்சப்போ இளைஞர் கண்ட ஆச்சரியம்!!
மேலும் இதன் அறிமுக போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளன.
பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே 16 ஆவது ஐபிஎல் தொடர் விரைவில் ஆரம்பமாக உள்ளது. அதே போல, இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால், அனைத்து அணியில் உள்ள வீரர்களும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதன் காரணமாக, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஐபிஎல் குறித்த விஷயங்கள் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. இந்த நிலையில், தோனி குறித்து சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ள கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் நீண்ட காலமாக இணைந்து ஆடி உள்ளனர். சிறந்த நண்பர்களாகவும் அவர் இயங்கி வந்த சூழலில், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்த அணிகளும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனையடுத்து ஓய்வினை அறிவித்த ரெய்னா, சில லீக் தொடர்களிலும் ஆடி வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி இருக்கையில், தான் தோனியை முதல் முறையாக பார்த்த போது நடந்த சம்பவம் குறித்து சில நினைவலைகளை சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார்.
"கடந்த 2004 ஆம் ஆண்டு, கிழக்கு மற்றும் மத்திய மண்டலம் இடையே உள்நாட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த சமயத்தில் ஜார்கண்ட்டில் இருந்து நீண்ட முடி வைத்திருக்கும் வீரர் ஒருவர் அதிரடியாக விளையாடுவதாக எங்களுக்கு செய்தி வந்தது. அப்போது அந்த வீரர் யார் என தெரிய வந்தபோது தான் ஹோட்டலில் தோனியை பார்த்தேன்.
Images are subject to © copyright to their respective owners.
ஒரு ஓரத்தில் அமர்ந்து பட்டர் சிக்கன் மற்றும் ரொட்டி ஆகியவற்றை தோனி சாப்பிட்டு கொண்டிருந்தார். எங்கள் அணியை சேர்ந்த ஒரு வீரர், இவரால் நமக்கு எதிராக அதிக ஸ்கோர் அடிக்க முடியாது. அவர் உணவை ரசித்து சாப்பிடுகிறார், அதையே தொடரட்டும் என் கூறினார். ஆனால் போட்டியின் போது தோனி அடிக்கமாட்டார் என கூறியவர் ஓவரிலேயே சிக்ஸர்களை பறக்க விட்டார். அதன் பின்னர் தோனி பற்றி அப்படி கூறியவர் அந்த வார்த்தைகளை திரும்ப எடுத்து கொண்டார்" என ரெய்னா தெரிவித்துள்ளார்.
தோனி சர்வதேச ஓய்வினை அறிவித்த அதே நாளில் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "இந்தா அறிவிச்சுட்டாங்கல்ல".. இனி ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலா இவரு தான் KKR கேப்டன்.. வெளியான Official தகவல்!!