"ரெடியா இருக்கேன்".. CSK பென் ஸ்டோக்ஸ்-ன் போஸ்ட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பென் ஸ்டோக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Image Credit : Ben Stokes | Instagram
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி (இன்று) துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.
Image Credit : Ben Stokes | Instagram
கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் தொடரிலேயே வெளியேறி இருந்தது. ஆகவே, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெய்ல் ஜெமிசன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் சிசாண்டா மஹாலாவை CSK அணி தேர்வு செய்துள்ளது. அதே நேரத்தில் CSK-வின் முகேஷ் சவுத்ரியும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சிங் CSK அணியில் இணைந்திருக்கிறார்.
Image Credit : Ben Stokes | Instagram
ஐபிஎல் தொடரில் முதன் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார் ஸ்டோக்ஸ். சமீபத்தில் இவர் சென்னை வந்த நிலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வந்தன. இந்த சூழ்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், அனைத்து பயிற்சிகளும் முடிந்துவிட்டதாகவும், சென்னை அணியுடன் விளையாட ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் ஸ்டோக்ஸ். அதனுடன் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இந்த போஸ்ட் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
