"புயல் அடிக்கப் போகுது".. PEAKY BLINDERS கெட்டப்பில் CSK வீரர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்த சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
ஐபிஎல் 2023
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
பயிற்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி முடிவடைந்துள்ளதால் ஜடேஜா CSK அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, இங்கிலாந்து அணியின் மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் சென்னைக்கு வந்திருக்கின்றனர். ஆல் ரவுண்டர்களான ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோரின் பங்களிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதலாக பலமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
Freaky All - Rounders
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் சிஎஸ்கே-வின் ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் பிரபல வெப் சீரிஸான Peaky Blinders கெட்டப்பில் இருக்கின்றனர். அந்த புகைப்படத்தில் "Freaky All - Rounders" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
