"இது அன்புடென் டைரீஸ்".. வெறித்தனமான பிராக்டீசில் வீரர்கள்.. CSK பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 25, 2023 07:34 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பிராக்டீஸ் செய்யும் வீடியோவை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

CSK Players Practice in chepauk stadium Video Goes Viral

                                                    Image Credit : CSK | Twitter

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Image Credit : CSK | Twitter

பயிற்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி முடிவடைந்துள்ளதால் ஜடேஜா CSK அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, இங்கிலாந்து அணியின் மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் சென்னைக்கு வந்திருக்கின்றனர். காயம் காரணமாக ஓய்வில் இருந்த தீபக் சஹார் அணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சென்னையில் CSK வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image Credit : CSK | Twitter

ஆல் ரவுண்டர்களான ஜடேஜா, ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோரின் பங்களிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதலாக பலமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்தே CSK அணி வெளியேறியிருந்தது. இந்நிலையில் இந்த முறை சென்னை அணி கப் அடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு மத்தியில் இப்போதே எழுந்துள்ளது.

Image Credit : CSK | Twitter

வீடியோ

இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதில் தல தோனி, ஜடேஜா, சஹார், ராயுடு என மொத்த டீமும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வீடியோவின் கேப்ஷனில் அன்புடென் டைரீஸ் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags : #CSK #IPL #VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CSK Players Practice in chepauk stadium Video Goes Viral | Sports News.