தமிழ் பாடலை பாடிய சுரேஷ் ரெய்னா.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. அதுக்கப்புறம் போட்ட ஸ்டெப் தான்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 25, 2023 12:44 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Former Cricketer Suresh Raina sang Tamil song Video

                       Images are subject to © copyright to their respective owners.

சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. கடந்த 2011 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை புரிந்திருந்தது. இதில், இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சுரேஷ் ரெய்னா, பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல, ஐபிஎல் போட்டி ஆரம்பமானது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த சுரேஷ் ரெய்னா.

Images are subject to © copyright to their respective owners.

பத்து சீசன்களுக்கு மேலாக அந்த அணிக்காக ஆடி உள்ளார். ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரராக ஜொலித்த சுரேஷ் ரெய்னாவுக்கு Mr. IPL என்ற பெயரும் உண்டு. அந்த அளவுக்கு ஏராளாமான போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள ரெய்னா, கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி இருந்தார். இதனையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக, சென்னை அணி ரெய்னாவை அணியில் இருந்து  விடுவித்திருந்தது.

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இந்த சூழ்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரெய்னா கலந்துகொண்டிருக்கிறார். அப்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்ளுக்கு மத்தியில் தோன்றிய ரெய்னா, 'முன்பே வா' பாடலின் சில வரிகளை பாட, கூட்டம் ஆர்ப்பரித்தது. இதனையடுத்து, 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடி அனைவரையும் திக்குமுக்காட செய்திருக்கிறார் ரெய்னா. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

Tags : #SURESH RAINA #CSK

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Former Cricketer Suresh Raina sang Tamil song Video | Sports News.