'நோ மீன்ஸ் நோ'.. அநியாயமா 'ஒரு ரிவ்யூவ' வேஸ்ட் பண்ணிட்டீங்களே? மூளை கெட்டு போச்சா? வறுத்தெடுத்த வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Aug 26, 2019 03:32 PM
ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையே நடந்த ஆஷஸ் தொடரின் 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வெற்றிவாய்ப்பு இருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டம், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கனவை பறித்தது.

67 ரன்களே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்த இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை, இரண்டாவது இன்னிங்ஸில் சாத்தியப்படுத்தினார் பென் ஸ்டோக்ஸ்.ஆஸ்திரேலியா நிர்ணயித்திருந்த 359 ரன்கள் என்கிற இலக்கை எட்ட, 9 விக்கெட்டுகளை ஒரே ஒரு விக்கெட் மீதம் இருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் இந்த ரிஸ்க்கை எடுத்தார்.
இதில் நாதன் லயன் வீசிய பந்து ஒன்றுக்கு ஸ்டோக்ஸ் எல்பிடபுள்யூ ஆனார். இதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் ரிப்ளேவில் அவர் அவுட் ஆகியிருந்துள்ளார். எனினும் ஆஸ்திரேலிய அணிக்கு ரிவ்யூ மீதம் இல்லாததால், ஸ்டோக்ஸ் தப்பித்தார்.
அந்த ரிவ்யூ இருந்திருந்தால், ஸ்டோக்ஸை அவுட் ஆக்கியிருக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கலாம் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும், பயிற்சியாளர்களும், பந்துவீச்சாளர்களும் தெரிவித்து வருவதோடு டிம் பெய்னை வறுத்தெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, லீச்சின் கால்காப்பில் பட்டு லெக் ஸ்டெம்புக்கு வெளியே தெளிவாக பிட்ச் ஆன பந்து என தெரிந்தும், அதற்கு வேஸ்டாக ஒரு ரிவ்யூ எடுத்து வீணாக்கிவிட்டார் என்றும் மூளையை இழந்துவிட்டாரா என்றும் முன்னாள் கேப்டன்கள் இயன் சேப்பல், ஆலன் பார்டர், மார்க் டெய்லர் உள்ளிட்ட பலரும் விமர்சித்துள்ளனர்.
