மீண்டும் வெடித்த ‘நாட் அவுட்’ சர்ச்சை..! விரக்தியில் வெளியேறிய ஜேசன் ராய்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 11, 2019 11:09 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அம்பயர் அவுட் கொடுத்த விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

WATCH: Jason Roy argued with umpires on controversial catch

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான அரையுறுதிப் போட்டியில், நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டநிலையில், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி பிர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே சருக்கலாக அமைந்தது. முக்கிய பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர்(9), ஆரோன் பின்ச்(0) மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப்(4) அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்(85) நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுபுறம் விக்கெட் விழுந்துகொண்டே இருக்க 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 226 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் ஜேசன் ராய் 85 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் ஜேசன் ராய் அவுட்டானது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மிங்ஸ் வீசிய 17 -வது ஓவரின் 2 -வது பந்தை எதிர்கொண்டார். ஆனால் பேட்டில் படாமல் கீப்பர் கைக்கு சென்றது. இதனை ஆஸ்திரேலய வீரர்கள் அம்பயரிடம் அப்பீல் கேட்க, அம்பயரும்  அவுட் கொடுத்தார். ஆனால் பந்து பேட்டில் படாதது போல் இருந்ததால் ஜேசன் ராய் அம்பரிடம் வாக்குவாதாத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #SEMIFINALS #JASON ROY #AUSVENG