‘ஸ்லோ ஓவர் ரேட், இனி யாருக்கும் தடை இல்லை'... ஆனால், ஐசிசி புதிய விதி'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 19, 2019 09:17 PM
ஸ்லோ ஓவர் ரேட் எனப்படும், இனி மெதுவாக ஓவர் வீசும் அணிகளின் கேப்டன்கள், தடையோ அல்லது சஸ்பெண்ட்டோ செய்யப்பட மாட்டார்கள் என ஐசிசி புதிய விதி முறைகளை அறிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கவிருக்கும் நிலையில், ஐசிசியானது, டெஸ்ட் போட்டிகளுக்கான சில விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமான விதி என்னவென்றால், ஒரு நாளில் மெதுவாக ஓவர் போடும், அணிகளின் கேப்டன்களுக்கு தடை காலம் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட நேரத்துக்குள், இத்தனை ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்பது விதியாகும். அதனை மீறும் வீரர்களுக்கு, சில போட்டிகள் தடைசெய்யப்படும் விதியே வழக்கத்தில் இருந்தது.
தற்போது அந்த விதியில், ஐசிசி மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. மேலும் சில விதிகளை ஐசிசி கொண்டு வந்திருக்கிறது. அதாவது, ஸ்லோ ஓவர் ரேட் எனப்படும் மெதுவாக பந்துவீசும் நிலை இருந்தால், அதற்கு கேப்டன் மட்டும் பொறுப்பல்ல, மொத்த அணியும் பொறுப்பாகும். இதனால் அனைவருக்கும், கடும் அபராதம் விதிக்கப்படும். மொத்த அணிகளுக்கும், கேப்டனுக்கு விதிக்கப்படும் அபராதம் எவ்வளவோ, அதுவே அவர்களுக்கும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.