‘இவரு பந்தெல்லாம் இப்படி அடிச்சா தான் உண்டு’.. ‘பிரபல வீரர் பகிர்ந்துள்ள வைரல் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Aug 22, 2019 07:03 PM
பேட்ஸ்மேன் ஒருவர் பவுன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஹெல்மெட் அணிந்த தலையால் முட்டித்தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் வட்டாரத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ஸ்மித் அடிபட்டதுதான் கடந்த ஒரு வாரமாக விவாதப் பொருளாகி உள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் கழுத்துப்பகுதியைத் தாக்கியது. இதனால் அவர் வெளியேற அவருக்கு பதிலாக மார்னஸ் லேபுஸ்சேன் களமிறங்கினார். பின்னர் இவரும் ஆர்ச்சர் பந்துவீச்சில் அடி வாங்கினார்.
இந்நிலையில் லெய்செஸ்டர் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மார்க் கோஸ்குரோவ் பவுலர் வீசிய பந்தை ஹெல்மெட் அணிந்த தலையால் முட்டி ஸ்லிப் திசைக்கு அனுப்பியுள்ளார். பேட்ஸ்மேன் பந்தை தலையால் முட்டித் தள்ளும் இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கெவின் பீட்டர்சன், “ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஜோஃப்ரா பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது” என இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
