இவங்க '5 பேரையும்' எதுக்காகவும்.. 'டீமை' விட்டு அனுப்ப மாட்டாங்க.. யாருன்னு நீங்களே பாருங்க?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 29, 2019 11:28 PM
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை ஒவ்வொரு வீரரும் பெருமையாக கருகின்றனர். வருடாவருடம் ஐபிஎல் போட்டிகளுக்கு முன் நடைபெறும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை விடுவித்து புதிய வீரர்களை எடுக்கும். ஆனால் ஒருசில வீரர்களை அந்த அணி எப்போதுமே விடுவிக்காது. அவர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

விராட் கோலி
2008-ம் ஆண்டு பெங்களூர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட விராட் இன்றுவரை அதே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை 5412 ரன்களை குவித்துள்ளார். இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணியாக இருந்தாலும் விராட் இருப்பதால் ரசிகர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்கின்றனர்.
ரோஹித் சர்மா
ஹிட்மேன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் முதல் 3 சீசன்கள் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். 2013-ம் ஆண்டு மும்பை அணிக்கு மாறினார். அன்றில் இருந்து இன்றுவரை தொடர்ந்து அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 4898 ரன்கள் குவித்துள்ளார். தொடர்ந்து 4 முறை கோப்பை வென்று வெற்றிகரமான கேப்டனாக திகழ்வதால் இவரை மும்பை அணி விடுவிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
டேவிட் வார்னர்
2013-ம் ஆண்டு வரை டெல்லி அணிக்காக விளையாடிய வார்னர் 2014-ம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு மாறினார். 5.5 கோடிகள் கொடுத்து இவரை ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. மிகச்சிறந்த ஓபனர்களில் ஒருவரான வார்னர் ஒவ்வொரு சீசனிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். பந்தை தடை செய்த விவகாரத்துக்கு பின்னரும் ஹைதராபாத் அணி இவரை விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்பிரிட் பும்ரா
2013-ம் ஆண்டு மும்பை அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் இவரின் திறமையை கண்டறிந்து அணியில் சேர்த்தார். அன்று தொடங்கி இவரின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது. கோப்பை வென்ற 4 முறையும் பும்ரா அணியில் இருந்துள்ளார். தற்போது உலகின் மிகச்சிறந்த பவுலராக இருக்கும் பும்ராவை மும்பை அணி ஒருபோதும் நழுவ விடாது.
ஆண்ட்ரே ரஸல்
கொல்கத்தா அணி ஜாக்குஸ் காலிஸ்க்கு மாற்று வீரரை தேடியபோது ரஸலை 60 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தனர். மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ரஸல் இதுவரை 711 ரன்களுடன் 53 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த ஆண்டு இவரின் பார்ம்(ஸ்ட்ரைக் ரேட் 204) உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இவரை கொல்கத்தா ஒருபோதும் நழுவ விடாது என நம்பலாம்.
