'பில்லியர்ட்ஸ் விளையாட போன இடத்துல'... காத்திருந்த 'அதிர்ச்சி'... திகில் கிளப்பிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Jul 29, 2019 03:59 PM
வீட்டுக்குள் பில்லியர்ட்ஸ் விளையாடும் மேஜையில், பில்லியர்ட்ஸின் பால் செல்லும் ஓட்டைக்குள் பாம்பு பதுங்கியிருந்த சம்பவ்ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மகாணத்தில் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஒரு வீட்டில், பில்லியர்ட்ஸ் விளையாடும் மேஜை அமைக்கப்பட்டிருந்தது. வழக்கம்போல், வார இறுதி நாட்களில் விளையாட விரும்பிய உரிமையாளர், பில்லியர்ட்ஸ் விளையாட ஆரம்பித்தார். அப்போது அவர் விளையாட ஆரம்பித்த சிறிதுநேரத்தில், பில்லியர்ட்ஸ் பால்களை அடிக்கும்போது, அவை போர்டின் நுனியில் உள்ள பந்து செல்லும் ஓட்டையில் செல்லாமல் அப்படியே நின்றன.
இதையடுத்து பால்களை எடுப்பதாற்காக அவர் பார்த்தபோது, அங்கு ஒரு பாம்பு தலையை மட்டூம் தூக்கியவாறு எட்டிப்பார்த்தது. பாம்பு பதுங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் வந்து பாம்பை பத்திரமாக மீட்டனர். விஷமில்லாத பாம்பு என்பதால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பிரிஸ்பேன் ஸ்னேக் கேட்சர்ஸ் என்ற குழுவின் பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
