ராணுவம் செல்லும் தோனியை கிண்டலடித்த பிரபல முன்னாள் வீரர்..! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 22, 2019 02:23 PM

இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி பாரா மிலிட்டரி செல்வதை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாய்டு கிண்டல் அடிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

David Bumble Lloyd mocks MS Dhoni’s decision to serve Army

உலகக்கோப்பை முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி அடுத்தாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரிஷப் பந்த், வாசிங்டன் சுந்தர், தீபக் சஹார், ராகுல் சஹார் போன்ற இளம் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

அதேபோல் உலகக்கோப்பை தொடரில் காயம் அடைந்திருந்த முன்னணி வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடித்துள்ளனர். ஆனால் விக்கெட் கீப்பர் தோனி பாரா மிலிட்டரில் பணியாற்ற செல்வதால் இந்த தொடரில் அவர் இடம் பெறவில்லை.

இந்நிலையில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தது. இதை கிண்டல் செய்யும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாய்டு சிரிக்கும் எமோஜியை பதிவிட்டார். இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #MSDHONI #BCCI #ARMY #ENGLAND #DAVID BUMBLE LLOYD #MOCK