‘ஒரு ப்ளேயரை இப்டியா பண்றது’.. சர்ச்சையை கிளப்பிய ரசிகர்களின் செயல்..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 02, 2019 01:24 PM

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

WATCH: Warner receives hostile Sandpaper send off from England fans

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் விளையாட 1 வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடை காலம் முடிவடைந்ததால் மீண்டும் இருவரும் அணிக்கு திரும்பினர்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வார்னர் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அப்போது வார்னர் மைதானத்தில் இருந்து வெளியே செல்லும்போது, பந்தை சேதப்படுத்தியதை நினைவு படுத்தும் விதமாக சாண்ட்பேப்பரை (Sandpaper) தூக்கிக் காட்டி ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ரசிகர்களின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 144 ரன்கள் அடித்து அசத்தினார்.

Tags : #WARNER #ENGLAND #FANS #TEST #SANDPAPER #ENGVAUS