"அது வெறும் ஒயர் தான் சாமி.." - ஏர்போர்ட்ல அதிகாரிகளிடம் உருட்டிய பயணி.. SCAN-ல் தெரியவந்த திடுக்கிடும் உண்மை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தினை வித்தியாசமான முறையில் கடத்திவந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் விமான நிலையமே சற்று நேரத்துக்கு பரபரப்புடன் காணப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து தந்திரமாக தங்கத்தினை கடத்த முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. பணத்திற்காக ஆசைப்பட்டு, இளைஞர்கள் இத்தைகைய வலையில் சிக்கிக்கொள்வதாக கடந்த மாதம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். லக்கேஜ்களில் ரகசிய இடம் அமைத்து அதன்வழியே தங்கம் மற்றும் போதை பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதை சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இருப்பினும் தற்போது விமான நிலையங்களில் பயன்பாட்டில் இருக்கும் அதிநவீன பரிசோதனை கருவிகள் மூலமாக கடத்தல்காரர்களின் இந்த முயற்சி முறிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில், தங்கத்தினை வித்தியாசமாக கடத்திவந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அந்த தங்கத்தை கைப்பற்றியிருக்கிறார்கள் சுங்கத்துறை அதிகாரிகள்.
பரிசோதனை
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு ஏர் அரேபியா விமானம் மூலமாக வந்த நபர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்திருக்கின்றனர். அவரிடம் இருந்த பெட்டியை ஸ்கேன் செய்தபோது, உள்ளே மர்ம உலோகம் இருப்பதை அதிகாரிகள் அறிந்தனர். அதன்பிறகு இதுகுறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை நடத்தினர். ஆனால், தான் அப்படியான எந்த பொருளையும் கொண்டுவரவில்லை என அந்தப் பயணி தெரிவித்திருக்கிறார்.
ஸ்கேன்
இதனை தொடர்ந்து அவருடைய இரண்டு டிராலி பேக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி திகைப்பூட்டியிருக்கிறது. பையின் அடித்தளத்தில் இருந்த இரும்பு கம்பிக்கு பின்னால் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதுவும் தங்கத்தினை ஒயர் போல செய்து, அதன் மீது ரோடிய முலாம் பூசியிருக்கிறார் அந்த நபர்.
இந்நிலையில், சுங்கத்துறையினரால் பயணி கைது செய்யப்பட்ட நிலையில், சுங்கச் சட்டம் 1962 இன் விதிகளின் கீழ் தங்கக் கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு கோடி
பயணியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 2170.3 கிராம் இருந்ததாகவும் இது 99.5 சதவீதம் தூய்மையானது எனவும் ஜெய்ப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு 1,12,20,451 ரூபாய் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
