இந்த கல்ல அறுத்தப்போ 'வெள்ளி மழை' மாதிரி பெஞ்சுது...! '6 வருஷமா வீட்டுக்குள்ள மறைச்சு வச்சிருந்த கல்...' - 'உண்மை' தெரிஞ்சு அதிர்ந்து போன நபர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Nov 29, 2021 12:52 PM

ஆஸ்திரேலியாவில் உள்ள மேரிபோரோ பிராந்திய பூங்காவானது 19-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய தங்க வேட்டை இடமாக இருந்தது. அதன்பின் அரசு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்காவாக மாற்றப்பட்ட இந்த பகுதியில் ஒரு சிலருக்கு இன்றளவும் தங்கம் கிடைக்கும்.

Australian man thought the rock was a golden stone

இதுகுறித்து அறிந்த டேவிட் ஹோல் என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு மேரிபோரோ பிராந்திய பூங்காவிற்கு தங்கத்தை தேடி சென்றுள்ளார். அப்போது அந்த பூங்காவில் வித்தியாசமான கல் ஒன்று கிடைத்துள்ளது.

இதைப்பார்த்து ஆச்சரியம் அடைந்த டேவிட், இந்த கல் தங்கமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு அதை தனது வீட்டிற்கு டேவிட் எடுத்து சென்றுள்ளார். சுமார் 6 ஆண்டுகளாக இந்த கல்லை தனது வீட்டு அறையில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இப்போது தான் டேவிட் தேடி எடுத்த அந்த கல் தங்கம் இல்லை எனவும், அது 4.6 பில்லியன் ஆண்டு கால பழமையான எரிகல் எனவும் தெரியவந்துள்ளது.

இதற்கு முன் டேவிட் பலமுறை இதை உடைத்து பார்த்தால் அதிலுள்ள தங்கத்தை வெளியில் எடுத்து விடலாம் என்று நினைத்துள்ளார். ஆனால் டேவிட்டால் அந்த கல்லை உடைக்க முடியவில்லை. எனவே அதை அப்படியே தனது வீட்டு அறையில் ஆறு வருடமாக வைத்து பாதுகாத்துள்ளார்.

அண்மையில் இந்த கல்லை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் அருங்காட்சியகத்திற்கு எடுத்து சென்று பரிசோதனை செய்ய முடிவு எடுத்துள்ளார். அங்கு அவருக்கு சற்றும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. அங்கிருந்த ஆய்வாளர்கள் கல்லை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, இந்த கல் வானத்தில் இருந்து பூமிக்கு வந்துள்ளது. இது ஒரு 'எரிகல்' என தெரிவித்தனர்.

மேலும், "இந்த கல் செதுக்கப்பட்ட, பள்ளமான தோற்றத்தைக் கொண்டுள்ளதாகவும். இவை வளிமண்டலத்தின் வழியாக வரும்போது உருவாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கல்லை தற்போது மேரிபோரோ எரிகல் என்று அழைக்கப்படுகிறது. இது 17 கிலோ எடையில் காணப்படும் இந்த கல் இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய அடர்ந்த தன்மை கொண்ட மூலப்பொருட்கள் இதில் இருப்பதால் அதிக எடை கொண்டுள்ளது. மிக தடிமனான வைரத்தினால் இந்த கல்லை அறுத்து பார்த்துள்ளார். அப்போது அதை பார்ப்பதற்கு வெள்ளி மழை பெய்தது போல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Tags : #ROCK #GOLD #AUSTRALIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Australian man thought the rock was a golden stone | World News.