சார், நீங்க 'நினைக்குற' மாதிரி எதுவும் இல்ல...! என்ன நம்புங்க, சத்தியமா அது 'பெயிண்ட்' தான்...! 'பேன்டின் உள்பக்கத்தில் செக் பண்ணியபோது...' - என்ன என்ன 'பண்றாங்க' பாருங்க...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ரூ.14 லட்சம் மதிப்புடைய தங்கத்தை உருக்கி பேன்டில் தடவி கொண்டு வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் விமான நிலையங்களில் தங்க கடத்தலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அதுவும் வினோதமான முறைகளில், ஹாலிவுட் சினிமா காட்சிகளை மிஞ்சிய அளவிற்கு தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் கண்ணூர் விமான நிலையத்தில் சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிக்கியுள்ளது.
தங்கத்தை கடத்தி வந்த நபர், சுமார் 302 கிராம் தங்கத்தை உருக்கி தனது பேண்டில் தடவியுள்ளார். பயணிகள் விமானத்தில் இருந்து வெளிவரும் போது சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர்.
அப்போது தான் அந்த நபரின் டபுள் லேயர் பேண்டில் 302 கிராம் அளவுள்ள தங்கம் பேஸ்ட் தடவியிருந்தது கண்டறியப்பட்டது. பெயிண்ட் தான் அதில் உள்ளது என்று முதலில் மறுத்தவர் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
பேன்டில் இருந்த தங்கத்தை கைப்பற்றிய போலீசார், அதனை கடத்தி வந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
