'நான் ஒரு 'ட்வீட்' போட்டா உங்க இஷ்டத்துக்கு அடிச்சு விடுறதா??... சும்மா கொளுத்தி போடாதீங்க..." அஸ்வின் 'ட்வீட்'டால் எழுந்த 'பரபரப்பு'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி அசத்தியிருந்தனர். எனினும், பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்ட காரணத்தினால் தான், இந்திய அணி வெற்றி பெற்றது என்று பல முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
finished in 2 days Not sure if that’s good for test cricket !If @anilkumble1074 and @harbhajan_singh bowled on these kind of wickets they would be sitting on a thousand and 800 ?🤔However congratulations to 🇮🇳 @akshar2026 what a spell! congratulations @ashwinravi99 @ImIshant 💯
— Yuvraj Singh (@YUVSTRONG12) February 25, 2021
அது மட்டுமில்லாமல், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூட, தனது ட்விட்டர் பக்கத்தில் பிட்ச்சை குறை கூறி, மனமில்லாமல் இந்திய அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தது போல ட்வீட் ஒன்றை செய்திருந்தார். வெளிநாட்டு வீரர்கள் பிட்ச்சை குறை கூறி வரும் போது, இந்திய வீரர் ஒருவரின் டிவீட்டும் அப்படி இருந்ததால், நெட்டிசன்களிடையே இந்த ட்வீட், கடும் பரபரப்பை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து, இந்திய வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், வரிசையாக மூன்று ட்வீட்களை, யாருக்கும் புரியாத வகையில், மறைமுகமாக எதையோ குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். இதில் மார்க்கெட்டிங் பற்றியும், மக்களின் கருத்துக்கள் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்பது பற்றியும், கருத்துக்களை எப்படி திணிக்கிறார்கள் என்பது பற்றியுமான கருத்துக்களை அவர் பகிர்ந்திருந்தார்.
Products are sold using various marketing strategies and that’s an accepted practice! We now live in an era where ideas are also being sold to us and it’s a classic example of “outbound marketing”, however I would like to add that buying ideas being sold to us is like telling us
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 26, 2021
Finally. We can always have and stand by our opinions even if it’s against the majority as long as we know that it is our own and not the one thats been sold to us!
“The choice is always ours”
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 26, 2021
ஆனால், யாரை பற்றி அவர் கூறுகிறார் என்பது யாருக்கும் புலப்படவில்லை. மேலும் சிலர், யுவராஜ் சிங் டிவீட்டிற்கு தான் இந்த பதிலடி என்று அஸ்வினின் ட்வீட்டில் கமெண்ட்டும் செய்தனர். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்று, அஸ்வின் செய்த இந்த ட்வீட், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் பேசியதை மறைமுகமாக தாக்கி இருக்கிறார் என கூறியிருந்தது.
This is exactly what I said in my series of tweets!! I don’t want any of you all to try and give meaning to or politicise my tweets. My profession is cricket and that’s what I have spoken about, please don’t add flavour to skew minds. https://t.co/SCn9AdqQ9u
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 26, 2021
இந்த வீடியோவை பகிர்ந்த அஸ்வின், 'என்னுடைய டிவீட்டிற்கு புதிய அர்த்தத்தை கொடுக்க வேண்டும் என்றோ, அரசியல் சாயத்தை பூச வேண்டும் என்றோ யாரும் நினைக்க வேண்டாம். என்னுடைய தொழில் கிரிக்கெட். நான் செய்த டிவீட்டும் கிரிக்கெட்டை பற்றியது தான். இதனால், என்னுடைய டிவீட்டிற்கு புதிய சாயம் எதுவும் பூச வேண்டாம்' என குறிப்பிட்டுள்ளார். அஸ்வின் வெளிப்படையாக கூறியுள்ள கருத்து, தற்போது நெட்டிசன்களிடையே மேலும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.