VIDEO : 'கிரவுண்ட்'ல ஆக்ரோஷமா இருப்பாரு... ஆனா, இப்போ என்ன இப்டி 'சேட்டை' பண்ணிட்டு இருக்காரு..." 'கோலி'யின் லேட்டஸ்ட் 'வீடியோ'!!... செம 'வைரல்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Feb 24, 2021 09:04 PM

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு போட்டியாக அகமதாபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

virat kohli imitate kallis and steve smith ahead of pinkball test

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 112 ரன்களில் ஆல் அவுட்டானது. அக்சர் படேல் 6 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி மட்டும் 53 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆடி வருகிறது. இந்த போட்டியில், ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது, இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் வீழும் போது, இந்திய கேப்டன் விராட் கோலி  சற்று ஆக்ரோஷமாகவே காணப்பட்டார். ஆனால், போட்டிக்கு முன்பாக, வலைப்பயிற்சியின் போது, கோலி சில சர்வதேச வீரர்களை போல செய்து காட்டியுள்ளார்.

 

இதில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் போல பேட்டிங் செய்து வேடிக்கை காட்டிய கோலி, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான காலிஸ் போல பந்து வீசவும் செய்தார். போட்டியில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் கோலி, இன்னொரு பக்கம் மிகவும் ஜாலியாக, சேட்டை செய்யும் வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat kohli imitate kallis and steve smith ahead of pinkball test | Sports News.