"சேப்பாக்கம் என்னைக்கும் நம்ம பக்கம் தான்..." அசத்தல் வெற்றி பெற்ற 'இந்தியா'... முழுக்க முழுக்க 'தமிழ்'ல ட்வீட் செய்து பாராட்டிய 'வீரர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்திருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபாரமாக வென்று, தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ரோஹித் ஷர்மா 161 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு, ஆடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களில் ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், அஸ்வின் சதமடித்து அசத்தியதால், இங்கிலாந்து அணிக்கு 482 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழ, இந்திய அணியின் வெற்றி உறுதியானது. 164 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் காட்டிய அஸ்வின் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்திய அணியின் அசத்தல் வெற்றிக்கு அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வரும் நிலையில், ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியை பாராட்டி ட்வீட் ஒன்றை தமிழிலேயே செய்துள்ளார். 'சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.! அது ஒரு போதும் இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான்.! மீண்டும் என் தமிழ் மக்களை மைதானத்தில் கான்பது மகிழ்ச்சி தான்.!
@BCCI வெற்றியை உங்களோடு கொண்டாடுவது உங்கள் தமிழ் புலவர் ஹர்பஜன் தான்..! @TNCACricket #INDvEND #WhistlePodu' என குறிப்பிட்டுள்ளார். தமிழிலேயே இந்திய அணிக்கு வாழ்த்துக்களை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள நிலையில், நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.
சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.!
அது ஒரு போதும் இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான்.!
மீண்டும் என் தமிழ் மக்களை மைதானத்தில் கான்பது மகிழ்ச்சி தான்.! @BCCI வெற்றியை உங்களோடு கொண்டாடுவது உங்கள் தமிழ் புலவர் ஹர்பஜன் தான்..! @TNCACricket #INDvEND #WhistlePodu pic.twitter.com/twOtGeD6dM
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 16, 2021
இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்பஜன் சிங், சென்னை அணியில் தேர்வானது முதல் தமிழ் மொழியிலேயே அதிகம் ட்வீட் செய்வது வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
