"அடேய், இது உலக மகா நடிப்புய்யா.." இங்கிலாந்து வீரரின் செயலால் கடுப்பான 'கோலி'... மைதானத்தில் கொடுத்த 'ரியாக்ஷன்'!... வைரல் 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு போட்டியாக தற்போது நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 112 ரன்களில் ஆல் அவுட்டானது. அக்சர் படேல், தான் களமிறங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மற்றபடி, அஸ்வின் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து இந்திய அணி ஆடி வரும் நிலையில், கில் மற்றும் புஜாரா ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர். ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் செய்த செயல் ஒன்று, ரசிகர்களிடையே அதிகம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
முன்னதாக, இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இரண்டாவது ஓவரை, ஸ்டுவர்ட் பிராட் வீசினார். அப்போது, கில் பந்தை எதிர்கொண்ட நிலையில், அந்த பந்து அவரது பேட்டில் பட்டு, ஸ்லிப்பில் நின்ற பென் ஸ்டோக்ஸ் கைக்குச் சென்றது. ஆனால், நடுவர்கள் அவுட் கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்த நிலையில், மூன்றாவது நடுவருக்கு முடிவு சென்றது.
தொடர்ந்து, ரீப்ளே வீடியோவில் பார்த்த போது, ஸ்டோக்ஸ் கைக்கு பந்து செல்வதற்கு முன், மைதானத்தில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனால், பந்து தரையில் பட்டது தெரிந்து வைத்துக் கொண்டே, ஸ்டோக்ஸ் ரீப்ளே கேட்டதை எண்ணி ரசிகர்கள், அவரை அதிகமாக சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
@ARanganathan72 virat kohli after seeing replay of catch taken by stokes “abe kya chutiya hogaya kya”😂 pic.twitter.com/PFQEZYDzS6
— Kalpesh Mandot (@MandotKalpesh99) February 24, 2021
அது மட்டுமில்லாமல், இந்திய கேப்டன் விராட் கோலி, இதற்கு கொடுத்த ரியாக்ஷனும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அதாவது, ரீப்ளே வீடியோவில் அவுட்டில்லை என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த கோலி, அவுட் இல்லை என்பதை தெரிந்து வைத்துக் கொண்டே அப்பீல் செய்தீர்கள் என்பது போன்ற முக பாவனையை காண்பித்தார். இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
அது மட்டுமில்லாமல், பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அவுட் கொடுக்காததால் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த செயலும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.