VIDEO : "என்னங்க இது??... இப்டி எல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லி 'இருக்கோம்'ல..." 'பென் ஸ்டோக்ஸ்' செயலால் எழுந்த 'சர்ச்சை'!!.. எச்சரித்த 'நடுவர்கள்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு போட்டியாக தற்போது நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கொரோனா தொற்று பரவல் காரணமாக, கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற்று வரும் நிலையில், போட்டியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டும் வருகிறது.
முன்னதாக, போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தினை எச்சில் கொண்டு துடைக்கும் பழக்கத்தினை அனைத்து வீரர்களும் கொண்டிருந்தனர். இதற்கு அனுமதியும் இருந்தது. ஆனால், கொரோனா தொற்றின் காரணமாக, எச்சிலைக் கொண்டு பந்தை சுத்தம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் தங்களது வேர்வையைக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அப்படி ஒரு சர்ச்சை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய அணி பேட்டிங் செய்ய வந்த போது, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், பந்தினை எச்சில் கொண்டு சுத்தம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த செயலை எச்சரித்த போட்டி நடுவர்கள், இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். அது மட்டுமில்லாமல், பந்தினை சானிடைஸர் கொண்டு நடுவர்கள் உடனடியாக சுத்தம் செய்தனர்.
#BenStokes doing what #BMC is well known to do....in #Mumbai😂#ThukLagana#Thukpatti#IndvEng#PinkBallTest pic.twitter.com/joZ3ysf7Be
— मुंबई Matters™✳️ (@mumbaimatterz) February 24, 2021
மேலும், இதே போன்ற ஒரு நடவடிக்கையை இங்கிலாந்து அணி வீரர்கள் வேறு யாரேனும் மீண்டும் ஒரு முறை மேற்கொண்டால், இங்கிலாந்து அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பகலிரவு போட்டியான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி, இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர்.