‘66 வயதில் 4-வது திருமணம் செய்த தாய்லாந்து மன்னர்’.. துணைப் பாதுகாப்புத் தலைவருக்கு அடித்த யோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | May 02, 2019 08:02 PM
கடந்த புதன் கிழமை தாய்லாந்து மன்னர் தனது பாதுகாப்பு துணை தலைவராக பதவி வகித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலாங்கோனின் சமீபத்திய இந்த திருமணம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. காரணம் அத்தனை பெரிய பணக்காரர் தனது பாதுகாப்பு பிரிவில் இருந்த பெண்ணையே திருமணம் செய்து, தனக்கு சமமான அங்கீகாரத்தை தந்துள்ளதுதான்.
மிக அண்மையில்தான், உலகக் கோடீஸ்வரர்கள் பலர் விவாகரத்து செய்துகொள்வதைக் காண முடிந்தது. ஆனால் தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலாங்கோன் முன்னதாக மூன்று முறை திருமணமானவர் என்பதோடு அந்த திருமணங்களுக்கு பின்னர் விவாகரத்தானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ஆம் ஆண்டு மன்னர் மகா வஜ்ரலாங்கோனின் தந்தை புமிபோல் இறந்த பின்னர், மன்னரான மகா வஜ்ரலாங்கோன் தற்போது தனது 66வது வயதில் தனது 4வது திருமணத்தை செய்துள்ளார்.
இம்முறை தனது பாதுகாப்பு படைப்பிரிவு துணைத்தலைவராக பதவி வகித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு பின்னர், அரசமுறை நிகழ்வாக, அப்பெண்ணுக்கு தாய்லாந்தின் இளைய அரசிக்கான சுதிதா பட்டம் சூட்டப்பட்டது.