"என்னய்யா, இப்படி ஒரு சான்ஸ விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்கே?.." போட்டிக்கு நடுவே குழம்பி நின்ற 'டிவில்லியர்ஸ்'.. 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில், 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது.
இன்றைய போட்டிக்கு முன்பாக, தாங்கள் ஆடியிருந்த 4 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்திருந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் முதல் தோல்வியை சென்னை அணிக்கு எதிராக இன்று சந்தித்தது. இந்த போட்டியில், குறிப்பாக சென்னை அணி வீரர் ஜடேஜா (Jadeja), பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மொத்தமாக ஒரு ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் காட்டியிருந்தார்.
அது மட்டுமில்லாமல், இன்றைய போட்டியில் பெங்களூர் அணி, ஃபீல்டிங்கில் நிறைய தவறுகளை செய்திருந்தது. இதில், கைக்குக் கிடைத்த மிக எளிதான வாய்ப்பு ஒன்றை, பெங்களூர் வீரர் சாஹல் (Chahal) தவற விட்டது தொடர்பான வீடியோ ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது. சென்னை அணி பேட்டிங்கின் போது, 10 ஆவது ஓவரை சாஹல் வீசினார்.
அந்த ஓவரில், களமிறங்கிய ரெய்னா (Raina), தான் சந்தித்த முதல் பந்தை, அருகே தட்டி வைத்து விட்டு, ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது பெங்களூர் விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ் (De Villiers), வேகமாக ஓடி பந்தை எடுத்து, பவுலர் சாஹலிடம் வீசினார். ஆனால், அந்த பந்தை சாஹல் பிடிக்க முயற்சி செய்யாமல் நின்றதால், முதல் பந்திலேயே அவுட்டில் இருந்து தப்பினார் ரெய்னா.
— Aditya Das (@lodulalit001) April 25, 2021
சாஹலின் செயலைக் கண்ட டிவில்லியர்ஸ், ஏன் அவுட் செய்யாமல் நின்றாய் என்பது போன்ற முக பாவனைகளை அதிர்ச்சியுடன் செய்து காட்டினார். அவுட்டில் இருந்து தப்பிய ரெய்னா, அதன் பிறகு 3 சிக்ஸர்களை பறக்க விட்டு அசத்தியருந்தார்.
@RCBTweets Chahal did mistake runout chance .this is big for RCB after .May be #Chahal not getting count this wicket .
— CA BIOSCIENCES PVT LTD (@CHINNALAABIOSC1) April 25, 2021
Chahal is sloppy in the field ! Missed a runout
— S Feroz Khan (@SFerozKhan8) April 25, 2021
Chahal
picks up the Misses Raina’s
first wicket runout chance#RCBvsCSK pic.twitter.com/RszvtqSsNu
— ಟ್ರೋಲ್ ಹೈಕ್ಳು (@TrollHaiklu) April 25, 2021
ஏற்கனவே, பெங்களூர் அணிக்கு ஃபீல்டிங் மோசமாக அமைந்த நிலையில், சாஹலின் செயலும், பெங்களூர் ரசிகர்கள் மத்தியில் கடுப்பைக் கிளப்பியுள்ளது.