நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க...! அப்படியே திரும்பி வந்து 'நம்ம டீம்ல' ஆடுங்களேன்...! பயிற்சியாளர் மார்க் பவுச்சர் 'அவருக்கு' அனுப்பிய மெசேஜ்...! - அதிர்ச்சியில் ஐபிஎல் ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது நடைபெற்று வரும் ஐபில் 14வது சீசன் தொடரில், ஆர்சிபி அணியின் அதிரடி வீரராக திகழ்கிறார் தென்னாபிரிக்க அணி வீரர் டி வில்லியர்ஸ்.
இவர் கடந்த 2018 மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். குறிப்பாக ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் ஆட வேண்டும் என்பதற்காக இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது இருப்பினும் கடந்த 2019 உலகக் கோப்பையின் போது மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்ப முயன்றார். ஆனால் அப்போது அணி நிர்வாகம் இவரின் கோரிக்கையை ஏற்கவில்லை.
இம்மாதிரியான சூழ்நிலையில் தற்போது ஐபில் தொடரில் ஆர்சிபியின் அதிரடி ஆட்டக்காரராக இருக்கும் டி வில்லியர்ஸ்-சை தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் நாட்டிற்கு திரும்புமாறு செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்
அந்த பேட்டியில், 'டி வில்லியர்ஸ் இப்போதும் நல்ல பார்மில், சர்வதேச லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். நான் இப்போது சொன்னதை குறித்து அவரிடமே மெசேஜ் செய்து குறிப்பிட்டேன். அதுமட்டுமில்லாமல், ஐபிஎல்லில் நீங்கள் எப்போதும் போல ஆடுங்கள் என்றும் மெசேஜ் செய்தேன். இதனை அவரின் ஐபிஎல் தொடருக்கு முன்பாக இப்படி குறிப்பிட்டேன்.
கண்டிப்பாக மீண்டும் இந்த ஐபிஎல் தொடர்கள் முடிந்ததும் அவரின் ஆட்டம் குறித்து பேசுவேன்.
குறிப்பாக நம்முடைய தென்னாப்பிரிக்க அணியில் அவருக்கான இடம் இன்னும் திறந்தே இருக்கிறது. தற்போது சர்வதேச போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடுவதை காண்பதை போல, மீண்டும் தென்னாபிரிக்க அணியில் காண ஆவலோடு இருக்கிறேன்.
தென்னாப்பிரிக்க டி 20 அணியில், டி வில்லியர்ஸ் வந்தால் அவரை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்' என நாசுக்காக தங்கள் நாட்டு வீரரை அனுப்புமாறும், டி வில்லியர்சுக்கும் தூது விடுத்துள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர்.