'தல' கீப்பிங், 'சின்ன தல' பேட்டிங் ... 'சத்தியமா இது கனவு இல்லங்க' ... 'CSKFIED' ஆன ரசிகர்கள் !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 09, 2020 02:19 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Chennai Super Kings released a new photo of Dhoni and Raina

இம்மாத இறுதியில் ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பயிற்சி ஆட்டத்தைக் காண சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். பல நாட்களாக சர்வதேச போட்டிகளில் ஆடாமல் இருந்து வரும் சென்னை கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரின் புகைப்படம் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் 'நீங்கள் கனவு காணவில்லை, கண் கொள்ளா காட்சி' என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் ரெய்னா பேட்டிங் செய்து ஷாட் ஒன்றை அடிக்க, தோனி கீப்பிங் செய்து கொண்டே பந்து செல்லும் திசையை கண்டு கொண்டிருக்கிறார்.

ஐ.பி.எல் போட்டிகளுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிட்டு சென்னை அணியின் ரசிகர்களை ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்னதாகவே ஆக்டிவ் மோடில் வைத்துள்ளனர்.

Courtesy : Chennai Super Kings Twitter

 

 

Tags : #CHENNAI SUPER KINGS #IPL 2020 #DHONI #RAINA