VIDEO: 'அப்போ இன்னைக்கு பெருசா ஏதோ சம்பவம் இருக்கு...' 'சின்ன தல' வெளியிட்ட வீடியோ...! 'இது சும்மா டீசர் தான்...' - வேற லெவல் எதிர்பார்ப்பில் 'சிஎஸ்கே' ஃபேன்ஸ்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று (16-04-2021) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளையாட உள்ளது.

சிஎஸ்கேவின் சீசன் துவக்க ஆட்டத்தில் ஒரு முக்கியமான அரைசதம் அடித்த ரெய்னா, இந்த மேட்சிலும் அடித்து துவம்சம் செய்ய போகிறார் என்பதற்கான சாத்தியம் அவர் வெளியிட்டுள்ள பயிற்சி ஆட்ட வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது.
அந்த வீடியோவில் 'சின்ன தல' ரெய்னா வியர்த்து வெறிகொண்டு ஆடுவதை காணமுடிகிறது.
சமீப காலமாக அவர் எந்த இண்டர்நேசனல் போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. மற்றும் ஒருசில காரணங்களினால் கடந்த ஐபிஎல் சீசனிலும் விளையாடாமல் இருந்தார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் சிறு பயம் இருந்தது. ஆயினும் இந்த ஐபிஎல் சீசனில் வந்த முதல் ஆட்டத்தில் நன்றாக விளையாடியுள்ளார். எனவே இந்த மேட்சிலும் அவர் மீது ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Game ready! Prepare today for a steady tomorrow! 💪🏽#Believe #WhistlePodu pic.twitter.com/XVtCEnQo72
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 15, 2021

மற்ற செய்திகள்
