‘இப்டியா த்ரோ பண்றது’... ‘விக்கெட் கீப்பரின் செயலால்’... ‘நடந்த விபரீதம்’... வைரலான வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 27, 2019 03:13 PM
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில், வினோதமாக நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது போல பல்வேறு நாடுகளிலும் பல டி20 தொடர் நடைபெற்று வருகின்றன. அதனை போன்ற ஒரு தொடர் தான் t20 பிளாஸ்ட். இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் இந்த டி20 போட்டி தொடரில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் டி20 பிளாஸ்ட் தொடரில் துர்ஹாம் மற்றும் யார்க்ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விக்கெட் கீப்பரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மஹாராஜ், யார்க்ஷைர் அணிக்காக ஆடிவருகிறார். மஹாராஜ் வீசிய பந்தை, எதிரணியான துர்ஹாமின் பேட்ஸ்மேன் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று அடிக்காமல் விட்டார். இருப்பினும் அந்த அணியின் வீரர்கள் ரன் ஓடினர்.
அப்போது மஹாராஜின் யார்க்ஷைர் அணியின் விக்கெட் கீப்பரான ஜோனாதன் அந்த பந்தை எடுத்து ரன் அவுட் செய்கிறேன் என்று, ஸ்டம்ப் இருக்கும் திசையை பார்க்காமலேயே பந்தை த்ரோ செய்தார். அவர் வேகமாக வீசிய பந்து, மஹாராஜின் மேல் பலமாக அடித்தது. வலி தாங்க முடியாமல் அவர் ஓடினார். இந்த சம்பவம், அனைவரையும் ஒரு செகண்ட் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. துடிதுடித்த மஹாராஜ் வலியுடனே கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
The poor bowler 😂#Blast19 pic.twitter.com/cFjcYc6Ls1
— Vitality Blast (@VitalityBlast) August 24, 2019
