'தல' தோனிக்கு பர்த்டே : ஆயிரக்கணக்கில் வாழ்த்துகள் வந்தாலும்... மனைவி 'சாக்‌ஷி'யின் வாழ்த்துதான் 'டாப்'! - அப்படி என்ன சொல்லி 'வாழ்த்துனாங்க'?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Jul 07, 2020 04:25 PM

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளில் சிறப்பாக ஜொலிக்க செய்ததில் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனிக்கு முக்கிய பங்குண்டு.

csk msdhoni sakshi singh birthday wishes greyed bit more sweeter

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலககோப்பை, 2011 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பை என இரண்டையும் இந்திய அணி வென்ற போது அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தோனி. ரசிகர்கள் பட்டாளம் அதிகமுள்ள தோனிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வீரேந்திர சேவாக், 'ஒரு தலைமுறையில் தோன்றும் ஒரு வீரருக்கு இந்த தேசம் முழுவதும் சொந்தம் கொள்ளும். அவர்களின் குடும்பத்தில் ஒருவராக பார்க்கும். அப்படிப்பட்ட ஒருவர் தான் தோனி. அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என தனது ட்விட்டர் பதிவில் புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார். அதே போல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மணும் தோனிக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 'இந்த மனிதரின் அமைதியும், பொறுமையும் தினந்தோறும் ஊக்கமளித்து வருகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், சுரேஷ் ரெய்னா, குல்தீப் யாதவ் ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தோனியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி பாய். நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிக் கொள்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy b'day Mahi bhai. Wish you good health and happiness always. God bless you 🙏😃

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

இந்த வாழ்த்துக்கள் அனைத்தையும் விட எம்.எஸ். தோனியின் மனைவி சாக்ஷி தனது கணவருக்கு தெரிவித்த வாழ்த்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. 'உங்களுக்கு இன்னொரு ஆண்டு வயதாகி விட்டது. முடி இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது. ஆனால், இன்னும் ஸ்மார்ட்டாக, ஸ்வீட்டாக மாறி விட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னொரு ஆண்டை கேக் வெட்டி கொண்டாடுவோம். கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார். 

தோனியின்  பிறந்தநாளை முன்னிட்டு இணையத்தளங்களில் அவரது பிறந்தநாள் தொடர்பான ஹேஷ்டேகுகள் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Csk msdhoni sakshi singh birthday wishes greyed bit more sweeter | Sports News.