"இனி வாய்ப்பில்ல ராஜா" ... 'தோனி'க்கு பதிலா தான் அவர் 'டீம்'ல இருக்காரே ... கணித்து சொல்லும் 'காம்பீர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 13, 2020 09:25 PM

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளும் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Gambhir gives a statement about Dhoni place in Indian team

இந்நிலையில் இந்தாண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தோனி ஆடுவாரா என்பது குறித்து பல்வேறு கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பை போட்டியில் தோனி கடைசியாக விளையாடியிருந்தார். அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் தோனி இடம் பெறாததால் ஐ.பி.எல் போட்டிகளில் அவரது விளையாட்டை வைத்து அணியில் கிடைக்கலாம் என்ற நிலையிருந்தது. தற்போது ஐ.பி.எல் போட்டிகளும் தள்ளிப் போவதால் அணியில் தோனிக்கான இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், கவுதம் காம்பீர் இதுகுறித்து கூறுகையில், 'ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாத பட்சத்தில் தோனிக்கு இடம் கிடைப்பது மிகவும் கடினம். பல மாதங்களாக விளையாடாமல் இருக்கும் ஒருவரை எந்த அடிப்படையில் அணிக்கு தேர்வு செய்ய முடியும். தோனியின் இடத்தை கே.எல்.ராகுல் நிரப்பியுள்ளார். தோனி அளவிற்கு கீப்பிங் செய்யவில்லை என்றாலும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்' என கூறியுள்ளார்.