'ஐ.பி.எல்' ஆடுனாலும் வாய்ப்பில்ல ராஜா ... இனி 'தலைக்கு' வாய்ப்பே இல்ல ... கணித்து சொல்லும் சேவாக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 18, 2020 05:28 PM

ஐ.பி.எல் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைப்பது சிரமம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

Virender Sehwag guess Dhoni will not selected in Indian Team

ஏழாவது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், 'ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை தோனி வெளிப்படுத்தினாலும் அவர் அணியில் தேர்வு பெறுவது மிகவும் கடினமான காரியமாகும். அவருக்கு பதிலாக வேறு வீரரை அணியில் களமறிக்க ஏற்கனவே அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேவாக் மேலும் கூறுகையில், 'அப்படி ஐ.பி.எல் போட்டிகளில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் யாருக்கு பதிலாக தோனியை அணியில் சேர்க்க முடியும். கே.எல்.ராகுல் தற்போது பேட்டிங், கீப்பிங் என இரண்டிலும் ஜொலித்து வருகிறார். அதே போல இளம் வீரர் ரிஷப் பண்ட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் டி 20 உலக கோப்பையின் இந்திய அணியில் தோனி இடம்பிடிப்பது கடினமான ஒன்று தான்' என தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசியாக மகேந்திர சிங் தோனி விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது .

Tags : #MAHENDRA SINGH DHONI #IPL 2020 #VIRENDER SEHWAG