'விராட் கோலி' மீது எழுந்த 'திடீர்' குற்றச்சாட்டு... விரைவில், 'பிசிசிஐ' விசாரணை...! - அதிர்ச்சியில் 'ரசிகர்கள்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி, டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக விளங்கி வருபவர் விராட் கோலி.
இவர் மீது மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக உள்ள சஞ்சீவ் குப்தா குற்றம் சுமத்தியுள்ளார். 'விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனாகவும், அதே நேரத்தில் தனியார் நிறுவனத்தின் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த நிறுவனத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் சம்மந்தமும் உள்ளது. இது இரட்டை ஆதாயம் அடையும் வகையில் உள்ளது' என புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ நெறிமுறைகளுக்கான அதிகாரி, 'விராட் கோலியின் இரட்டை ஆதாயம் குறித்து புகார் வந்துள்ளது. அதுகுறித்து கூடிய விரைவில் விசாரணை மேற்கொண்டு, புகாரில் உண்மை உள்ளதா என்பது குறித்து ஆராயப்படும். தொடர்ந்து ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், அது பற்றி விளக்கமளிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுப்பேன்' என தெரிவித்துள்ளார்.
விராட் கோலி இரு நிறுவனங்களின் இயக்குனராக உள்ளார். இந்த நிறுவனம், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், ரவிந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டவர்களின் விளம்பரங்கள் தொடர்பானவற்றை நிர்வகித்து வருகிறது. இப்படி இரு இடங்களில் பதவி வகிப்பது, விராட் கோலி இரட்டை ஆதாயம் அடையும் குற்றச்சாட்டுக்கு கீழ் வருகிறது. அதனால் அவர் ஏதேனும் ஒரு பொறுப்பை விட்டுத் தர வேண்டும் என்பதே சஞ்சீவ் குப்தாவின் குற்றச்சாட்டு.
முன்னதாக, சஞ்சீவ் குப்தா இதே போன்ற புகாரை ராகுல் முன்னாள் இந்திய வீரர்களான ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண் மீதும் சுமத்தியிருந்த நிலையில், அந்த புகார்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.