கையில் 'புக்' வெச்சுகிட்டு... ஃபீல் பண்ணி போட்டோ போட்ட 'கோலி'... சைக்கிள் ஃகேப்'ல வெச்சு செஞ்ச ஆஸ்திரேலியா 'வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில் அனைத்து வித விளையாட்டு போட்டிகளும் தடைபட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாத நிலையில் அனைத்து வீரர்களும் தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவழித்து வருகின்றனர்.

மேலும் சிலர், வீட்டில் செலவழிக்கும் முக்கிய தருணங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புத்தகம் படிக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 'மும்பையில் சிறந்த வானிலை நிலவுகிறது. முதன் முறையாக மும்பை பருவ மழை சமயத்தில் ஒரு நல்ல அனுபவத்தை பெறுகிறேன். இதை விட புத்தகம் படிக்க சிறந்த நேரம் அமையப் போவதில்லை' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை பறக்க விட, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் கமெண்ட் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. 'Bit of grey in that beard young feller' என கமெண்ட் செய்திருந்தார். இளம் வயதில், விராட் கோலி தாடியில் வெள்ளை முடி இருப்பதை தான் வார்னர் அப்படி குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து அந்த கமெண்ட்டும் வைரலானது.
ஊரடங்கு என்பதால் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது அதிக நேரங்களை சமூக வலைத்தளங்களில் செலவழித்து வருகிறார். அதிலும் குறிப்பாக அவரின் டிக் டாக் வீடியோக்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
