இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 21, 2020 01:08 PM

1. கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பேனல் (panel) உற்பத்தி பாதித்து விநியோகம் முடங்கியிருப்பதால், இந்தியாவில் தொலைக்காட்சி பெட்டிகளின் (Television) விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று கூறப்படுகிறது.

Tamil Important Headlines Read Here For February 21st

2. நேற்று 3,978 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 34 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 12 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

3. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய முறையைக் கையாள மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

4. காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதால், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.

5. தமிழகத்தில் எஞ்சியுள்ள ஊரக பகுதிகளுக்கான தேர்தலுடன் சேர்த்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது.

6. குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில் சர்வதேச அளவில் இந்தியா 131-வது இடத்தைப் பெற்றுள்ளது.

7. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

8. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில்  இந்திய அணி 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. குறிப்பாக இந்திய கேப்டன் கோலி 2 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து ரசிகர்கள் இந்திய அணியை கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

9. கொரோனா பாதிப்பு உள்ள சீனாவின் வூகான் நகரில் இருந்து இந்தியர்களை அழைத்து வரத் திட்டமிட்டிருந்த நிலையில், போயிங் சி 17 விமானம் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீன அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

10. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அடுத்த மாதம் குறையும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.