‘30 ஆண்டுகள்’ கழித்து ‘வரலாற்று’ சாதனை!... திணறலிலும் ‘தாக்குப்பிடித்த’ இந்திய அணியின் ‘தொடக்க’ வீரர்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டு30 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்துக்கு எதிராக முதல் செசன் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடிய வீரர் என்ற சாதனையை மயங்க் அகர்வால் படைத்துள்ளார்.

நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீசு்சை தேர்வு செய்துள்ளார். தொடக்கத்திலிருந்தே நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி திணற, தொடக்க வீரர்களான பிரித்வி ஷா 16 ரன்னிலும், அடுத்து வந்த புஜாரா 11 ரன்னிலும், விராட் கோலி 2 ரன்னிலும் ஆட்டமிழந்துள்ளனர்.
இந்நிலையில் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் பொறுமையாக விளையாடி, முதல்நாள் உணவு இடைவேளை வரை 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதன்மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில் முதல் செசன் முழுவதும் தாக்குப்பிடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை மயங்க் அகர்வால் பெற்றுள்ளார்.
முன்னதாக 1990ஆம் ஆண்டு இந்திய வீரர் மனோஜ் பிரபாகர் முதல் செசன் முழுவதும் ஆட்டமிழக்காமல் விளையாடியுள்ளார். அதன்பிறகு தற்போது 30 ஆண்டுகள் கழித்து மயங்க் அகர்வால் தான் முதல் செசன் முழுவதும் தாக்குப்பிடித்துள்ளார். இதையடுத்து மதிய உணவு இடைவேளைக்குப்பின் விளையாடிய அவர் 84 பந்தில் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்துள்ளார்.
