"நான் 'ஒண்ணு' எதிர்பார்த்தேன்.. ஆனா நடந்ததே வேற.. கடைசி 4 'வருசத்துல' நான் என்னவெல்லாம் பண்ணி இருக்கேன் தெரியுமா??.." 'சாஹல்' வேதனை!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் உங்க டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இந்த போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்நது, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த இரண்டு தொடருக்குமான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில வீரர்களின் பெயர் இடம்பெறாமல் போனது, அதிகம் கேள்விகளை எழுப்பியிருந்தது.
அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் பெயர், இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்திய அணியில் ஒரு சமயத்தில், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பிரிக்க முடியாத சூழல் காம்போவாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரின் இடத்தையும், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நிரப்பித் தக்க வைத்துக் கொண்டனர்.
இவர்கள் இருவரும் பந்து வீச்சில் பல மாற்றங்களைக் காட்டி, எதிரணியினரை திணறடித்தனர். ஆனால், சமீப காலமாக நடைபெற்று வரும் சில தொடர்களில், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐபிஎல் தொடர்களில், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பே அதிகம் கிடைக்காத நிலையில், சாஹல் தனக்கு கிடைக்கும் வாய்ப்பையும் வீணடித்து வந்தார்.
இதில், சாஹலுக்கு, குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் அவ்வப்போது வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி விட்டது. தற்போதும் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் போனது பற்றிப் பேசிய சாஹல் (Chahal), 'இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட போது, எனக்கு அணியில் இடம் கிடைக்காது என தெரியும். ஆனால், இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, சில சுழற்பந்து வீச்சாளர்கள் காயமடைந்ததால், எனது பெயர் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்த்தேன்.
அந்த சமயத்தில் டெஸ்ட் அணிக்குள் வந்த அக்சர் படேல், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். ஏற்கனவே, அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் அணியில் இருந்ததால், எனக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது கடினம் தான். அஸ்வின் 400 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஜடேஜாவும் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வரை கைப்பற்றியுள்ளார்.
இதை வைத்துப் பார்க்கும் போது, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். நிச்சயமாக, எனக்கு வெள்ளை ஆடை உடுத்த ஆசை இருக்கிறது. உங்களை யாராவது, டெஸ்ட் வீரர் என அழைத்தால், அதனை விட பெருமையான தருணம் எதுவும் இருக்க முடியாது. கடந்த 3 - 4 வருடங்களில், 10 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி, 50 விக்கெட்டுகள் வரை எடுத்துள்ளேன்' என சாஹல் தெரிவித்துள்ளார்.