‘உலகக் கோப்பை வர நேரம்பாத்தா இப்டி நடக்கணும்’.. என்னாச்சு பும்ராவுக்கு?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 04, 2019 04:33 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா கண்ணில் காயத்துடன் விளையாடிய புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(04.04.2019) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்மை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக காணப்பட்ட போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு மும்பை அணி முற்றுப்புள்ளி வைத்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. இதில் சூர்யகுமார் யாதவ் 59 ரன்களும், க்ருணல் பாண்ட்யா 42 ரன்களும் அடித்து அசத்தினர். கடைசியாக வந்த ஹர்திக் பாண்ட்யா 8 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்ட்ரி அடித்து அதிரடி காட்டினார்.
இதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க விரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். கை கொடுப்பர் என நினைத்த கேப்டன் தோனியும் 12 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதில் கேதர் ஜாதவ் 58 ரன்கள் எடுத்து ஆறுதலளித்தார்.
இப்போட்டியில் பும்ரா மற்றும் மலிங்காவின் டெத் ஓவர்கள் சென்னை அணியை திணறடித்தன. இதில் விளையாடிய பும்ராவின் கண்ணில் காயம் ஏற்பட்டிருந்தது. உலகக் கோப்பை வரும் சூழ்நிலையில் இது போன்று நடந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தெரிவித்த மும்பை அணியின் பயிர்சியாளர் ஜெயவர்தனே,‘பும்ரா பயிற்சியில் கேட்ச் பிடிக்கும் போது பந்து கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுவிட்டது. இது அவரது பந்துவீச்சை பாதிக்கவில்லை. இந்த போட்டியில் பும்ரா விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இருந்தாலும் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்’ என ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.