‘மும்பைக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் எடுத்தால் புதிய சாதனை’.. காத்திருக்கும் ‘தல’ தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 03, 2019 06:41 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்னும் 2 ரன்னில் சாதனை படைக்க காத்துள்ளார்.

MS Dhoni two runs away from reaching iconic landmark for CSK

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 46 பந்துகளுக்கு 75 ரன்கள் அடித்து தோனி அசத்தினார். அதில் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த தோனியின் வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடித் தீர்த்தனர்.

இந்நிலையில் இன்று(03.04.2019) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. இப்போட்டியில் 2 ரன்களை எடுத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை தோனி அடைவார். இதில் சென்னை அணிக்காக 5071 ரன்கள் எடுத்து சுரேஷ் ரெய்னா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #IPL #IPL2019 #CSK #MSDHONI #CSKVSMI #WHISTLEPODU #YELLOVEAGAIN