‘மண்ணின் மைந்தர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்’.. வைரலாகும் போட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 03, 2019 07:44 PM
ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 46 பந்துகளுக்கு 75 ரன்கள் அடித்து தோனி அசத்தினார். அதில் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த தோனியின் வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில் இன்று(03.04.2019) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.
இப்போட்டியில் 2 ரன்கள் அடித்தால் சென்னை அணிக்காக 4000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை தோனி அடையுள்ளார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 99 கேட்ச் பிடித்து முதல் இடத்தில் உள்ள சுரேஷ் ரெய்னா 100 -வது கேட்ச் பிடித்து அசத்துவார் என எதிர்பாக்கப்படுகிறது. இதற்காக வான்கடே மைதனாத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் மும்பை அணியின் ஜாகீர்கான் உள்ளிட்டோர் மைதானத்தை சரிசெய்யும் பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதனை அடுத்து மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது.
With the sons of soil! #WhistlePodu #Yellove #MIvCSK 🦁💛 pic.twitter.com/gAXBBz5sGe
— Chennai Super Kings (@ChennaiIPL) April 2, 2019
