‘முதல் தோல்விக்கு இதுதான் காரணம்’.. மனம் திறந்த தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 04, 2019 02:18 AM

வான்க்டே மைதானத்தில் தோனிக்கு ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

WATCH: Dhoni\'s Speech after losing against MI

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் நேற்று(03.04.2019) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 170 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்கவீரர்களாக அம்பட்டி ராயுடு மற்றும் வாடசம் களமிறங்கிறனர். அதில் அம்பட்டி ராயுடு முதல் பந்தியேலே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 16 ரன்களில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் மற்றும் தோனி கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்களின் முடிவில் சூப்பர் கிங்ஸ் 133 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதில் அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 58 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் வென்றதன் மூலம் 100 ஐபிஎல் போட்டிகளில் வென்ற அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.

இதனை அடுத்து போட்டி முடிந்த பின்னர் பேசிய தோனி, ‘ஃபீல்டிங் மற்றும் பௌலிங்கில் ரொம்பவே சொதப்பினோம். டெத் ஓவரில் அதிக ரன்களை கொடுத்துவிட்டோம். பிரவோவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரது இடத்தை நிரப்ப லுங்கி நிகிடி போன்ற வீரர்கள் இல்லை. அடுத்து சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ என தோனி தெரிவித்துள்ளார்.

Tags : #IPL #IPL2019 #CSKVSMI #MSDHONI #YELLOVEAGAIN #WHISTLEPODU