‘தோக்குறோம்.. ஜெயிக்குறோம்.. ஆனா..’ தோனியைப் புகழ்ந்த எதிரணி பிரபலம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Apr 04, 2019 01:24 PM
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, மும்பையின் வான்கடே மைதானத்தில் ரசிகர்களின் கரவொலியுடனும் பேராதரவுடனும் நிகழ்ந்தது.

இதில் அநேக படபடப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் மத்தியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை வீழ்த்தியது. ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை விடவும் சென்னை அணியின் விடாமுயற்சிக்கே ரசிகர்களின் உற்சாகக் குரல்கள் ஓங்கி ஒலித்தன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியை விட்டுக் கொடுக்காத அந்த குரல்கள் அரங்கை அதிரவைத்தன. அதற்கு முன், மும்பை இந்தியன்ஸ் அணியை பொருத்தவரை, ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடியான ஆட்டம், அந்த அணிக்கான பலத்தை அதிகப்படுத்தியது. முன்னதாக தோனி, கேதர் ஜாதவ் மற்றும் தீபக் சாஹவ் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹர்திக் பாண்ட்யா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பேட்டிங்கில் நின்றபோது, கடைசி ஓவரில் 29 ரன்களை எடுத்து ஆட்டத்தை மும்பைக்கு மடைமாற்றினார். இறுதியில் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.
இவ்வாறான வாய்ப்புகளால் மும்பை இந்தியன்ஸ் அணி, வெற்றி பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாக உரிமையாளர் நீதா அம்பானி, கிட்டத்தட்ட 12 வருடங்களாக தொடர்ந்து வரும் இந்த பயணத்தில், தனது மதிப்புக்கு உரியவராக எம்.எஸ்.தோனி இருக்கிறார் என்றும், அவ்வாறு தான் மிகவும் மதிக்கும் தோனிக்கு எதிராக தனது அணி ஆடுவதே தங்களுக்கு சிறப்பு வாய்ந்ததுதான் என்றும், தோற்றாலும் ஜெயித்தாலும் அவருக்கு எதிராக ஆடுவது பெரும் பேறுதான் என்றும் குறிப்பிட்டு தோனியை புகழ்ந்துள்ளார்.
