'ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை'...இன்னைக்கு அது நடக்குமா?...சென்னை ரசிகர்கள் வெய்டிங்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 03, 2019 04:26 PM
ஐபிஎல் போட்டிகள் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.அதோடு இன்று நடைபெற இருக்கும் போட்டியில்,சென்னை ரசிகர்களால் குட்டி தல என அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தோனி தலைமையிலான சென்னை அணியும்,ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று நடக்கும் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மோத இருக்கின்றன.இதனிடையே சென்னை அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நிறைய ரெக்கார்டுகளை வைத்துள்ளார்.ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் சமீபத்தில் பெற்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில்,ரெய்னா ஒரு கேட்ச் பிடித்தால் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் 100 கேட்சுகளைப் பிடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.தற்போது அதிக கேட்சுகளைப் பிடித்த வீரர்களின் பட்டியலில் 99 கேட்ச்களுடன் ரெய்னா முதலிடத்தில் இருக்கிறார்.அவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 96, தோனி 84 கேட்ச்களைப் பிடித்துள்ளனர்.
இதனிடையே மும்பை அணிக்கும் சென்னை அணிக்கும் போட்டியானது கடுமையாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.அதோடு இன்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா புதிய வரலாற்று சாதனையை படைப்பார் எனவும் சென்னை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
