'என்னா பங்கு.. இப்ப ஓகேவா?'.. வீரரின் சவாலை ஏற்ற உலக லெவல் ஐபிஎல் பிரபலம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Apr 04, 2019 01:02 PM
கிரிக்கெட் வீரர் வார்னேவுடன் செய்துகொண்ட சவால்படி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் மேத்யூ ஹெய்டன் சென்னையில் செய்துள்ள வைரலான காரியம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வார்னே, ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக பேசி வருகிறார். அதன் நிமித்தமாக சென்னையில் தங்கிய ஹெய்டன், சென்னை தி.நகரில் தாடி, மீசை, வேட்டி என மாறுவேடத்தில் சுற்றித் திரிந்துள்ளதோடு, சென்னை தி.நகரில் ரகசியமாக ஷாப்பிங் செய்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு இதுபற்றி அவர் கூறுகையில், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வார்னேவுடன், 1,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஷாப்பிங் செய்துகாட்டுவேன் என்று சவால் விட்டதாகவும், வார்னே அது சாத்தியமில்லை என்று சொன்னதாகவு கூறிய அவர், லுங்கி, வாட்ச் உள்ளிட்டவற்றை 1000 ரூபாய்க்கும் குறைவாக எடுத்ததாகவும், தனக்கு உதவிய கடைத்தெரு பையன் ஒருவனுக்கு 100 ரூபாய் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டின் மதுரை பகுதியில் நிகழ்ந்த டிஎன்பிஎல் போட்டிகளின்போது அங்கு சென்று சிலம்பாட்டம் ஆடிய ஹெய்டன் வைரலானார். தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடியவர் ஹெய்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.