"அந்த ஒரே ஒரு 'விஷயம்'.. அதுல தான் 'இந்தியா'வ விட நியூசிலாந்து 'STRONG'ஆ இருக்கு.." 'பிரட் லீ' சொன்ன 'காரணம்'.. "நமக்கு இன்னும் 'பயிற்சி' வேண்டுமோ??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்ளும், முழு எதிர்பார்ப்பில் உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நெருங்கி வரும் நிலையில், இதற்காக இந்திய கிரிக்கெட் அணி நேற்று இங்கிலாந்து சென்றடைந்தது.
டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணிகளாக விளங்கும் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள், இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை, பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற, மிகவும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இங்கிலாந்து மைதானம் என்பதால், நிச்சயம் அங்குள்ள பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளிலும், உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் இருப்பதால், இவர்களின் கையில் தான் வெற்றியை நிர்ணயிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ (Brett Lee), 'இது மிகவும் கடினமான போட்டி. இரு அணிகளிலும் தலை சிறந்த வீரர்கள் அதிகம் உள்ளனர். இதனால், இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு, கிட்டத்தட்ட சமமாக தான் உள்ளது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தில், இந்திய அணியை விட நியூசிலாந்து அணி சற்று உயர்ந்து நிற்கிறது.
நியூசிலாந்து அணிக்கு, அவர்களது நாட்டில் இருக்கும் மைதானங்கள் போன்றே இங்கிலாந்திலும் இருப்பதால், அங்குள்ள பந்தின் வேகம் மற்றும் பந்தின் டர்னிங் ஆகியவை, நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகும். இதன் காரணமாக தான், இந்திய அணியை விட நியூசிலாந்து அணி, ஒரு படி மேலே உயர்ந்து நிற்பதாக நான் கருதுகிறேன்.
அதே வேளையில், பேட்டிங் பக்கம் பார்த்தால், இரு அணிகளிலும் ஸ்விங் பந்துகளை சிறப்பாக கையாளும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால், இந்த போட்டியில், பவுலிங் தான் முக்கிய பங்கு வகிக்கும். எந்த அணி சிறப்பாக பந்து வீசுகிறதோ, அந்த அணி தான் கோப்பையைக் கைப்பற்றும்' என பிரட் லீ தெரிவித்துள்ளார்.