'இந்திய' அணியை வைத்து 'ரவி சாஸ்திரி' போடும் 'மாஸ்டர்' பிளான்!.. "இப்டி எல்லாம் நடந்தா நிச்சயம் நம்ம வேற 'லெவல்' தான்!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Jun 02, 2021 10:15 PM

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை தான், தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

ravi shastri hints about possiblity of 2 indian teams in future

இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில், நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள், இந்த இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது. மேலும், இந்த போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு, கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடைவெளியில், இந்திய அணி இங்கிலாந்தில் தான் தங்கவுள்ளது. அந்த சமயத்தில், இந்த டெஸ்ட் தொடர்களுக்காக தேர்வாகாத இந்திய அணி வீரர்கள், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் மோதவுள்ளனர்.

ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுடன் அதிக இளம் வீரர்களும் இந்த தொடர்களுக்காக தேர்வாகவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) இல்லாத இந்த அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக பத்திரிகையர்கள் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 'கொரோனா தொற்று காரணமாக, தற்போதைய சூழ்நிலையில், பயணம் செய்யவுள்ளவும் கட்டுப்பாடுகள் உள்ளதால், இப்படி இரண்டு அணிகளைக் கொண்டு ஆடுகிறோம். ஆனால், உங்கள் அனைவருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், எதிர்காலத்தில் ஒருவேளை குறுகிய வடிவிலான (டி 20) போட்டிகளில், அணியை விரிவுபடுத்த எண்ணினால், இப்படி இரண்டு அணிகளாக ஆடுவது தான் வழியாக இருக்கும் என நான் நினைக்கிறன்.

உங்களது அணியில், அதிக கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் போது, டி 20 போட்டிகளை உலகளவில் பிரபலமாக்க விரும்பினால், இப்படி அணியை விரிவுபடுத்துவது தான் ஒரே வழி. மேலும், அடுத்த 4 அல்லது 8 ஆண்டுகளில்,  ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் என்றால், கிரிக்கெட் போட்டிகளை இன்னும் நிறைய நாடுகள் ஆட வேண்டும். அதனை முன்னோக்கி செல்வதற்கான வழி, இதுவாகக் கூட இருக்கலாம்' என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர்கள் மூலம், அதிக இளம் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணி கண்டெடுத்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 50 சிறந்த வீரர்களைக் கூட ஒரே நேரத்தில், இந்திய அணியால் உருவாக்கி விட முடியும். தற்போது இங்கிலாந்து மற்றும் இலங்கையில் ஒரே சமயத்தில், இரண்டு அணிகளாக ஆடுவதைப் போலவே, வருங்கலாத்தில் இந்திய அணியை இரண்டு அணிகளாக தயார் செய்ய திட்டம் உள்ளதாக தெரிகிறது. அதனைத் தான் ரவி சாஸ்திரியும் தனது பேச்சில் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ravi shastri hints about possiblity of 2 indian teams in future | Sports News.