ரொம்ப ஸ்மார்ட்டா 'கோலி' விரிச்ச 'வலை'.. "அதுல சிக்காம எப்படி 'சைக்கிள்' கேப்'ல தப்பிச்சாரு பாத்தீங்களா??.." 'இளம்' வீரருக்கு கிடைத்த அசத்தல் 'பாராட்டு'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் முறையாக நடத்தப்படும் இந்த தொடரின் இறுதி போட்டியில், விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் (Kane Williamson) தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுமே, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிக பலத்துடன் விளங்கும் நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பதில் தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 'Dukes' பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில், வேகப்பந்து வீச்சாளர் கைலி ஜேமிசன் (Kyle Jamieson) இடம்பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்காக ஆடியிருந்தார்.
அப்போது பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, வலைப்பயிற்சியின் போது, கைலி ஜேமிசனிடம் Dukes பந்துகளைக் கொண்டு பந்து வீச முடியுமா என கேட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தயாராகும் விதமாக, தனது பந்து வீச்சு எப்படியிருக்கும் என்பதை கோலி தெரிந்து கொள்ள நினைக்கிறார் என்பதை அறிந்து கொண்ட ஜேமிசன், அவருக்கு பந்து வீசும் கோரிக்கையை மறுத்துள்ளார்.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி (Tim Southee), ஜேமிசனின் செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 'கோலி - ஜேமிசன் இடையே நடந்த சம்பவம் உண்மை தான் என்பது எனக்கு தெரியும். எந்தவொரு பேட்ஸ்மேனாக இருந்தாலும், அதற்கான பதில் அப்படித் தான் இருக்கும்.
விராட் கோலி ஸ்மார்ட்டாக ஜேமிசனுக்கு ஒரு பொறி வைத்திருக்கிறார். ஆனால், கைலி ஜேமிசன் அதில் சிக்காமல், அற்புதமாக நழுவி விட்டார்' என சவுதி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
