"இந்தியாக்கு அந்த 'பிளேயர்' எப்படியோ.. அந்த மாதிரி நம்ம 'டீம்'க்கும் ஒருத்தரு வேணும்.. அவர 'COPY' அடிச்சாச்சும் பெரிய ஆளா வாங்கப்பா.." ஏங்கிய 'பீட்டர்சன்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Jun 02, 2021 07:45 PM

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

england need to find one like jadeja says kevin pietersen

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள், அதிக பலத்துடன் காணப்படுகிறது. இதனால், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

அது மட்டுமில்லாமல், சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாட்டு மைதானங்களில், மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் கலந்துள்ள இந்திய அணி, எத்தகைய பலம் வாய்ந்த அணியையும் அச்சுறுத்தும் வகையில் தயாராக உள்ளது. அதிலும் குறிப்பாக, தனது சுழற்பந்து வீச்சால் எதிரணியினரை அச்சுறுத்தும் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen), ரவீந்திர ஜடேஜாவைப் பாராட்டி, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'பேட்டிங்கும் செய்யக் கூடிய, ஒரு சிறந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர், இங்கிலாந்து அணியில் இல்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. டெஸ்ட் போட்டி, ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில், இந்திய அணிக்காக ரவீந்திர ஜடேஜா என்ன செய்துள்ளார் என்பதை பாருங்கள்.

அப்படிப்பட்ட ஒரு வீரருக்கு தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்னுரிமை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளது. அப்படி ஒரு வீரர் கிடைத்தால், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விலை மதிப்பில்லாத வீரராக, இங்கிலாந்து அணிக்கு அவர் திகழ்வார். நீங்கள் ஒரு குழந்தை ஆகவோ, அல்லது வளர்ந்து வீராகவோ, அல்லது கவுண்டி வீராகவோ யாராக இருந்தாலும் சரி, ஜடேஜா செய்வதை அப்படியே காப்பி செய்யுங்கள்.

ஜடேஜா ஒரு சூப்பர் ஸ்டார் என்பதால், அவர் செய்வதை அப்படியே திரும்பச் செய்யுங்கள். அப்படி செய்யும் போது, இங்கிலாந்து அணிக்கான நீண்ட கால டெஸ்ட் கிரிக்கெட் வீரராக நீங்கள் வளருவீர்கள்' என பீட்டர்சன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று ஆரம்பமானது.

இதன் முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியில், வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியை களமிறக்கியுள்ளது பற்றி பேசிய கெவின் பீட்டர்சன், 'லார்ட்ஸ் மைதானத்தில், சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. இங்கிலாந்து அணியின் தேர்வு முறை, எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தான் இது காட்டுகிறது.

இங்கிலாந்து அணி நிச்சயம் ஒரு இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை அடையாளம் கண்டு, அவரை சரியாக உருவாக்க வேண்டும். இல்லையெனில், அந்த துறை நிச்சயம் பலவீனமானதாக இருக்கும்' என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. England need to find one like jadeja says kevin pietersen | Sports News.