"நீங்க எல்லாரும் அப்படியே நெனச்சுட்டு இருங்க.. 'கொஞ்ச' நாள்ல தெரியும்.. யாரு சொன்னது நடக்கப் போகுது'ன்னு??.." மொத்தமாக 'கிழித்து' தொங்க விட்ட 'சுனில் கவாஸ்கர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்காக, கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை என்பதாலும், அதே வேளையில், இரு அணிகளும் சமபலத்துடன் விளங்குவதாலும், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு, தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக, நியூசிலாந்து அணி, இங்கிலாந்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. இதன் மூலம், இங்கிலாந்து பிட்ச் கண்டிஷன் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என்றும், இதனால் இந்திய அணியை விட நியூஸிலாந்து அணி சற்று அதிக பலத்துடன் இருக்கும் என்றும், மைக்கேல் வாகன், பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக, நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளை ஆடவுள்ளது, அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என சில அவநம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். அதனை அப்படியே வேறு மாதிரி கூட பார்க்கலாம்.
அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி ஒருவேளை தோற்று விட்டால், அவர்களது நம்பிக்கை குறையக் கூடும். அதே போல, அந்த இரு டெஸ்ட் போட்டிகளில் ஏதாவது முக்கிய வீரர் காயமடைந்தால் கூட, அதுவும் அவர்களுக்கு பாதிப்பாக அமையலாம்.
ஆனால், இன்னொரு பக்கம், இந்திய அணிக்கு மிகவும் சாதகமான விஷயம் என்னவென்றால், அதிக எனர்ஜியுடன் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு அவர்கள் ஆடுவதால், அதிக புத்துணர்ச்சியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு அசத்துவார்கள்' என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.