'சார், அந்த பக்கம் போகாதீங்க'... 'தலை தெறிக்க பைக்கில் வந்த இளைஞர்கள்'... 'சாலையில் ரேம்ப் வாக் போட்ட புலிகள்'... கிலியை ஏற்படுத்தும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலையில் நடந்து சென்ற புலியால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.
கொரோனா பரவல் காரணமாகப் பல மாநிலங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் வனப் பகுதியை ஒட்டிய சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் சர்வ சாதாரணமாக அந்த சாலைகளிலும், அதனை ஒட்டியுள்ள கிராமங்களுக்கும் வருவது வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில் மகாராஷ்டிராவில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பக சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு புலிகள் நின்றுகொண்டிருந்தன. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்து போனார்கள். சாலையில் நடந்து சென்ற புலிகள் சிறிது தூரம் நடப்பதும், பின்னர் அப்படியே நிற்பதுமாக இருந்தது.
இதனை அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
I say them ‘striped monk’.
— Ramesh Pandey (@rameshpandeyifs) June 3, 2021
‘It is common to sight a tiger. What’s rare is knowing a tiger and giving it its due respect and space, and that takes a lifetime.’https://t.co/ovWP4FjMFmpic.twitter.com/Frdzlm7TRA
In the viral video, bikers are seen obstructing the path and moving closer to the tigers pic.twitter.com/Pww5OekPtp
— The Indian Express (@IndianExpress) June 3, 2021